உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

காரைக்கால்; காரைக்கால், திருநள்ளார் சேத்துார், காமாட்சி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அம்பகரத்துார் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் மேல்பகுதியில் ஒட்டடை அடிக்கும் போது நிலைத்தடுமாறி விழுந்து ராஜேந்திரன் காயமடைந்தார்.அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக மருந்துவர்கள் தெரிவித்தனர்.இதுக்குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ