உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி பலி 

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான வீடுர், கணபதிபட்டு, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 39; கூலி தொழிலாளி.குடிப்பழக்கம் உடைய பன்னீர்செல்வம் அடிக்கடி திருக்கனுார் வந்து மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் திருக்க னுார் கடை வீதியில் பன்னீர்செல்வம் அதிக குடிபோதையில் சாலையோரம் இறந்து கிடந்தார்.தகவலறிந்த திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பன்னீர்செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி