அரசு மகளிர் மருத்துவமனைக்கு லேப்ராஸ்கோபி கருவி வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மேம்பட்ட மருத்துவ சிகிச்சை வழங்க அதிநவீன லேப்ராஸ்கோபி கருவி வழங்கப்பட்டுள்ளது.இந்த கருவியின் மூலம் கருப்பை நீக்கம், நார்த்திசுக்கட்டிகளை அகற்றுதல், கருப்பை நீர்க்கட்டிகளை அகற்றுதல், கருக்குழாய் கருத்தடை, இடுப்பு ஒட்டுதல்களுக்கான சிகிச்சை, கருப்பை நீர்க்கட்டிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள அதிநவீன லேப்ராஸ்கோபி கருவியை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் பார்வையிட்டார். தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு லேப்ராஸ்கோபி கருவியை வழங்கியதற்காக கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.மேலும், இக்கருவியின் மூலம் அளிக்கப்படும் மேலான சிகிச்சையினால், அதிகபட்சமான நோயாளிகள் வலியின்றியும், அறுவை சிகிச்சை இன்றியும் மருத்துவம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.