உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லட்சுமி ஹயக்ரீவர் கோவில் தேரோட்டம்

லட்சுமி ஹயக்ரீவர் கோவில் தேரோட்டம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று தேர் திருவிழா நடந்தது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கிருஷ்ணா காயத்திரி ேஹாமம், ஹயக்ரீவ ேஹாமம், ராம காயத்திரி ேஹாமம், சுதர்சனேஹாமம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !