உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விடுதலை நாள் விழா காரைக்காலில் ஆலோசனை

விடுதலை நாள் விழா காரைக்காலில் ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடுவது தொடர்பாக, கலெக்டர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 1ம் தேதி நடைபெறும் புதுச்சேரி விடுதலை நாள்விழா குறித்து, கலெக்டர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அப்போது, விழா நடைபெறும் கடற்கரை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், நகரில் இருந்து கடற்கரை சாலைக்கு பொதுமக்கள் வருவதற்கு வசதியாக இலவச பஸ் வசதி, மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தருவது, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரன், துணை கலெக்டர்கள் ஜான்சன், செந்தில்நாதன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை