உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி நீதிமன்றத்தில் விடுதலை நாள் விழா

புதுச்சேரி நீதிமன்றத்தில் விடுதலை நாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் விழா புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலரும் மாவட்ட நீதிபதியுமான அம்பிகா தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் துணைத் தலைவர் இந்துமதி புவனேஸ்வரி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !