உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாகூர் கலை கல்லுாரியில் இலக்கிய களம் நிகழ்ச்சி

தாகூர் கலை கல்லுாரியில் இலக்கிய களம் நிகழ்ச்சி

புதுச்சேரி: தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை மற்றும் பிரஞ்சு துறை சார்பில் இலக்கியக் களம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.தாகூர் கல்லுாரி சுப்ரமணிய பாரதியார் கருத்தரங்கு கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் அகிலா, பிரஞ்சு துறை தலைவர் அன்பரசு வரவேற்றனர். தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணன் நோக்க உரையாற்றினார்.எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், பேராசிரியர்கள் தமிழ் அறிஞர்கள் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.பிரஞ்சு துறை பேராசிரியர் ஜென்னி நன்றி கூறினார். பேராசிரியர் கோவலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !