உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இலக்கிய பெருமன்ற பாரதி விழா

 இலக்கிய பெருமன்ற பாரதி விழா

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், பாரதி விழா ஜெயராம் ஓட்டலில் நடந்தது. பெருமன்றம் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வம் வரவேற்றார். பொது செயலாளர் பாலகங்காதரன் முன்னிலை வகித்தார். இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சினிமா பின்னனி பாடகர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு பாரதி விழாவையொட்டி நடந்த போட்டியில், பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி, பேசினார். கவிஞர் அமலோற்பவமேரி, பேராசிரியர்கள் கோவிந்தம்மாள், புனிதா, திவ்யா, கயல்விழி, சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். திருவாதிரை நாட்டியாலயா மாணவர்களின் இசை நடன நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை செயலாளர் சக்தி குருநாதன், யுவராஜா ஆகியோர் செய்திருந்தனர். துணைத் தலைவர் முனிசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !