உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அய்யப்ப சுவாமி கோவிலில் கல்லீரல் மருத்துவ முகாம்

அய்யப்ப சுவாமி கோவிலில் கல்லீரல் மருத்துவ முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி ஐய்யப்ப சேவா சங்கம், அரிக்கமேடு ரோட்டரி சங்கம் சார்பில் கல்லீரல் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோவிந்தசாலையில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. அரிக்கமேடு ரோட்டரி சங்கத்தின் தலைவர் சத்தியவண்ணன், அய்யப்ப சேவா சங்கத்தின் ஆறுமுகம், தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர் நாகராஜன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர்கள் நவசக்தி, கலையரசி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு கல்லீரல் ஸ்கேன் பரிசோதனை செய்து, அக்குபஞ்சர் மற்றும் ஹோமியோபதி சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். இதில், ரோட்டரி சங்கபொருளாளர் கோதை சதீஷ்குமார், கோட்ட செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் இளவழகன், அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள் சோழன், உமாசங்கர், மனோகர், பிரபாகரன், மதிவாணன், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ