உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.நா., மாநாட்டில் ல.ஜ.க., தலைவர் பங்கேற்பு

ஐ.நா., மாநாட்டில் ல.ஜ.க., தலைவர் பங்கேற்பு

புதுச்சேரி: ஐ.நா., காலநிலை மாநாட்டில், ல.ஜ.க., தலைவரும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ.,ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்று உரையாற்றினார். துருக்கி அன்டால்யா நகரில் நடந்து வரும் ஐ.நா., காலநிலை மாற்ற மாநாட்டில் ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ., பங்கேற்று ‘உறுதிமொழிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருதல்’ என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள், காடுகள் என அனைத்து உயிரினங்களுடனும் பகிர்ந்து வாழ்கிறோம். எல் நினோ போன்ற இயற்கை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி மற்றும் அதிக மழையை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். இந்தாண்டு அக்டோபர் 31ம் நிலவரப்படி இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத் திறன் 303.46 ஜிகாவாட் ஆகவும், 2025-ல் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி 500 டெராவாட் மணி அளவையும் கடந்துள்ளது. மேலும், பிரதம மந்திரி சூர்யகர்' திட்டத்தின் கீழ் கடந்த 2ம் நிலவரப்படி 65.26 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். விவசாயக் கழிவுகளை இயற்கை உரம் மற்றும் எரிபொருளாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும். மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைச் சாலை அமைக்கவும், பள்ளி இருக்கைகளுக்கும் பயன்படுத்தலாம். நாம் இந்தப் பூமியின் நிரந்தர உரிமையாளர்கள் அல்ல, அடுத்த தலைமுறைக்காக இதைப் பாதுகாத்து ஒப்படைக்க வேண்டிய தற்காலிக பாதுகாவலர்கள் மட்டுமே. வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு குடிமகனும் இணைந்து செயல்படுவதே இன்றைய தேவை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை