உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லோடு வேன் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

லோடு வேன் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

காரைக்கால் : கடன் பிரச்சனையால் லோடுவேன் டிரைவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்தவர் குமாரசாமி,54; டாடா ஏஸ் லோடு வேன் டிரைவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், சமீப காலமாக சரிவர வேலை இல்லாததால், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில் குமாரசாமி சாலை விபத்தில் சிக்கி வீட்டில் இருந்து வந்தார். அதனால், மனஉளைச்சலில் இருந்த குமாரசாமி நேற்று முன்தினம் சுடுகாட்டில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்த கொண்டார்.இதுக்குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகி்னறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை