உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்துதல், செக் போஸ்ட்களில் கண்காணிப்பு கேமிரா நிறுவுதல் உள்ளிட்ட டெண்டர் பணிகளை தேர்தல் துறை முடுக்கிவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. லோக்சபா தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர். முதற்கட்டமாக மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களின் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், வி.வி.,பாட் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தீவிர சோதனை செய்யப்பட்டது.அடுத்து லோக்சபா தேர்தலையொட்டி வாடகைக்கு அமர்த்தப்படும் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட உள்ளது. இதேபோல் மாநில எல்லைகளில் செக் போஸ்ட்களில் கண்காணிப்பு வைத்து 24 மணி நேரமும் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்கான டெண்டர் பணிகளை மாநில தேர்தல் துறை முடுக்கிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை