உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துார்வரும் பணி எம்.எல்.ஏ., ஆய்வு

துார்வரும் பணி எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி: வீரவள்ளி வாய்க்கால் தூர்வாரும் பணியை அதிகாரிகளுடன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். உப்பளம் தொகுதி, வீரவள்ளியில் இருந்து உப்பனார் ராசு உடையார் தோட்டம் வழியே செல்லும் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. கட்டட இடிபாடுகள் குவிந்து கிடந்தது. இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை பொறியாளர் தீனதயாளனிடம் தெரிவித்தார்.அதையடுத்து வாய்க்கால் துார்வாரும் பணி கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நேற்று பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். வாய்க்காலை, மழை காலங்களில் இல்லாமல் 3 மாதத்திற்கு ஒருமுறை துார்வார வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது கண்காணிப்பாளர் ராமதாஸ், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை