உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

புதுச்சேரி: லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூடப்பாக்கம் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கூடப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு விற்ற, கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் 45, என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின், அவர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்திய மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !