உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மீனவர்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது என, வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். காரைக்காலுக்கு எச்சரிக்கை வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதால் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களும் உடனே கரை திரும்ப வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை