உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில்

கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில்

புதுச்சேரி: புதுச்சேரியின் அடையாளமாக உள்ள கோவில் வளாக குப்பை தொட்டியில் காலி மதுபாட்டில் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி நகரில் பிரபலமான சுயம்பு கோவில் உள்ளது. புதுச் சேரியின் அடையாளமாக உள்ள இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இக்கோவில் வளாகத்தினுள் உள்ள குப்பை தொட்டி யில் பிரசாத தொன்னை களுடன் வெளிநாட்டு உயர்ரக காலி மதுபாட்டில் கிடப்பதும், அதனை, பெண் துாய்மை பணியாளர் ஒருவர், கருப்பு நிற குப்பை சேகரிக்கும் பையில் கொட்டி, கோவில் வளாகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதே கோவிலில், ஊழியர்களுக்கு அசைவ பிரியாணி வழங்கியதாக சர்ச்சை எழுந்து, விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை