மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் கமாண்டன் புதுச்சேரி மாஜி ராணுவ வீரர்கள் சந்திப்பு
புதுச்சேரி: மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் கமாண்டன்ட் அஜய்சிங் தாக்கூரை, முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத் தலைவர் மோகன் சந்தித்து பேசினார். பெங்களூருவில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் கமாண்டன்ட் அஜய் சிங் தாக்கூர், கர்னல் உன்னி கிருஷ்ணன் மற்றும் லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் கிர்வால் ஆகியோர் விழுப்புரத்தில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஓய்வூதிய குறைகேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களை புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இதில், சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வமணி, செயலாளர் தொம்னிக், ஆலோசனைக் குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் பொதுநலத் தொடர்பு அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். சங்கத்தின் சார்பாக அஜய் சிங் தாக்கூருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.