மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
04-Oct-2025
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம் மற்றும் 108 சுமங்கலி பூஜை இன்று நடக்கிறது. மொரட்டாண்டி சனீஸ் வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம் நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை 18 சித்தர்கள் பூஜை, குரு தட்சிணா மூர்த்தி பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ந டந்தது. மாலை 6:00 மணிக்கு கலச பூஜை நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வபூஜை, விருஷய பூஜை, காலை 10:00 மணிக்கு 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் சண்டி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதி, கலசம் புற்பாடும், தொடர்ந்து அம்மனுக்கு அபி ேஷகம் நடக்கிறது.ஏற்பாடுகளை சிதம்பர கீதாராம குருக்கள் செய்திருந்தார்.
04-Oct-2025