மகா சண்டியாகம் 17ம் தேதி துவக்கம்
புதுச்சேரி: சண்டிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சண்டியாகம் வரும் 17ம் தேதி துவங்குகிறது. உருளையன்பேட்டை, அய்யனார் நகரில், வெள்ளந்தாங்கி ஐயனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீசண்டிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 27ம் ஆண்டு மகா சண்டியாகம் விழா வரும் 17 ம் தேதி துவங்கிறது. இதையொட்டி, அன்று மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மாத்ருகா சக்தி, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சப்தசதீபாராயணம், லட்சுமி ஹோமம், சண்டி ஆவாஹன பூஜை, சப்தசதீ, அத்யாய ஹோமம், மங்கள திரவிய சமர்ப்பணம், வஸூத்தாரை, மகா பூர்ணாஹூதி நடக்கிறது. இரவு 12:00 மணிக்கு யோகினி பைரவ பூஜை - பலிவிதானம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 18ம் தேதி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, பகல் 12:00 மணிக்கு மகா சண்டியாகம், சண்டிகைக்கு விசேஷ பூஜை, வடுக, கன்யா, சுவாஸினி, தம்பதி, பிர்மசாரி பூஜை, வஸூத்தாரை மகா பூர்ணாஹூதி, சண்டிகா பரமேஸ்வரிக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது. பொதுமக்கள் யாகத்திற்கு தேவையான பொருட்களான ஹோம திரவியங்கள், வஸ்திரங்கள், பழங்கள், பூ மாலை ஆகியவற்றை அளித்து அம்மனின் அருளை பெற வேண்டுகிறோம். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மதிஒளி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.