உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூலநாதர் கோவிலில் மகா ருத்ராபிஷேகம்

மூலநாதர் கோவிலில் மகா ருத்ராபிஷேகம்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், மகா ருத்ராபிஷேகம் நடந்தது. பாகூரில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரம் மற்றும் சென்னை மணிமங்கலம் படப்பை புஜ்ஜியஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி நேற்று மகா ருத்ராபிஷேகம் நடந்தது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 8:00 மணிக்கு விநாயகர் பூஜை நடந்தது. ஏகாதச ருத்ர பாராயணம், ருத்ர ேஹாமம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 2:00 மணிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை