உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒரே துறையின் கீழ் தெருவிளக்கு பராமரிப்பு... தேவை; இருளில் மூழ்கும் வீதிகளால் மக்கள் அச்சம்

ஒரே துறையின் கீழ் தெருவிளக்கு பராமரிப்பு... தேவை; இருளில் மூழ்கும் வீதிகளால் மக்கள் அச்சம்

புதுச்சேரி: பல துறைகளாக சிதறி கிடைக்கும் தெரு விளக்குகள் பராமரிப்பு அனைத்தும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர கவர்னர். முதல்வர் உத்தரவிட வேண்டும்.வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் விரும்பி வந்தும் செல்லும் நகரமாக புதுச்சேரி உள்ளது. அதற்கேற்ப 24 மணி நேரம் நகர சாலைகள் துாய்மை பணியாளர்களால் துாய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த புதுச்சேரி 6 மணியை தொட்டதும் இருள்சூழ்ந்த தெருக்களாக மாறி விடுகின்றன.புதுச்சேரியில் நகர வீதிகளில் அனைத்திலும் தெரு விளக்குகள் உள்ளன. ஆனால் தெரு விளக்குகளை முறையாக மின் துறை, நகராட்சி, கொம்யூன், பஞ்சாயத்துகள், பொதுப்பணித் துறைகளால் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தெருவிளக்குகள் இருந்தும் எந்த பயனும் இல்லை; சாலையில் வெளிச்சமும் இல்லை. பிரதான சாலைகள் மட்டும் ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கின்றன. மற்ற உட்புற சாலைகள் அனைத்தும் இருள் சூழ்ந்து கும்மிருட்டாக காணப்படுகின்றன. தெரு விளக்குகளால் வீடுகளுக்கும் சாலைகளுக்கு தான் வெளிச்சம் கிடைக்க வேண்டும். ஆனால், புதுச்சேரியில் தலைகீழாக உள்ளது மாலை 6 மணி தொட்டதும் வீடுகளின் எரியும் விளக்குகளால் தான் சாலைகள் அனைத்தும் வெளிச்சம் பெறுகின்றன. இரவு 9 மணிக்கு வீடுகளில் இருப்போர் துாங்க சென்றதும் சாலைகள் அனைத்தும் இருளில் மூழ்கி விடுகின்றன. இதனால் சாலைகளில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றன.தெரு விளக்குகளுக்கு மின் துறை மின் இணைப்பு கொடுக்கின்றது. ஆனால் பராமரிப்பு என்று வரும்போது மின் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், பொதுப்பணித் துறைகளில் என நான்கு துறைகளில் பிரிந்து கிடக்கின்றது. இதுவே தெரு விளக்குகள் சரியாக பராமரிக்காமல் சாலைகள் இருள் சூழ்ந்து கிடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பழுதடைந்த தெரு விளக்குகளை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் புகார் கூறினால், ஒவ்வொரு துறையும் மாறி மாறி கையை காட்டுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலாக உள்ளது. தெரு விளக்குகள் எந்த துறையின் கீழ் வருகின்றது என்று கண்டுபிடிப்பதே பொதுமக்களுக்கு பெரிய வேலையாக உள்ளது. அப்படியே தேடி பிடித்து பொதுமக்களே புதிய தெரு விளக்குகளை வாங்கி கொடுத்து அழைத்தால் கூட பழுதான விளக்குகளை மாற்ற உடனடியாக யாரும் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.எனவே, பல துறைகளாக சிதறி கிடைக்கும் தெரு விளக்குகள் பராமரிப்பு அனைத்தும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர கவர்னர். முதல்வர் உத்தரவிட வேண்டும். குறிப்பாக மின் துறையின் கீழ் மின் விளக்கு பராமரிப்பினை கொண்டு வந்து போதிய நிதி அரசு ஒதுக்க வேண்டும். இப்படி செய்தாமல் மட்டுமே இருளில் மூழ்கி கிடக்கும் வீதிகள் தடைபடாமல் ஒளிரும். இதேபோல் பழுடைந்த தெரு விளக்குகளை மாற்ற 24 மணி நேரமும் ெஹல்ப் லைன்னுடன் கூடிய ரோந்து குழுவினையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Gnanaprakash D
செப் 27, 2024 07:16

Without light near dr Radhakrishnan Nagar park moolakulam people suffering at night while walking ladies and playing children


Gnanaprakash D
செப் 27, 2024 06:00

Same problem in dr Radhakrishnan Nagar moolakulam park also


Gnanaprakash D
செப் 27, 2024 05:59

பார்க் தெரு விளக்கு ஏரியா இட்த்தில் இல்லை


சமீபத்திய செய்தி