உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ டிரைவரை தாக்கிய நபர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கிய நபர் கைது

திருக்கனுார்; கூனிச்சம்பட்டில் ஆட்டோ டிரைவரை பீர் பாட்டியல் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டை சேர்ந்தவர் ஏகநாதன், 48; ஆட்டோர் டிரைவர். இவர் நேற்று கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடைக்கு, தனது நண்பர்களான கூனிச்சம்பட்டை சேர்ந்த அருள், சுரேஷ், மணலிப்பட்டை சேர்ந்த பாண்டுரங்கன் மற்றும் ஒருவருடன் சென்றார்.அங்கு, மது அருந்தியபோது, குடிபோதையில் ஏகநாதன், அருள் ஆகியோரிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த அருள் பீர் பாட்டியலால், ஏகநாதன் தலை மற்றும் கழுத்து பகுதியில் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.படுகாயமடைந்த ஏகநாதன் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.அவரது புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு, தப்பி ஓடிய கூனிச்சம்பட்டு, சீனிவாச நகரை சேர்ந்த அருள், 35; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ