உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

புதுச்சேரி; ஊர்காவல்படை வீரரின் சகோதரரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முரளிதரன், 25, லோடு மேன் வேலை செய்து வருகிறார். இவர், தனது நண்பர்கள் சும்சுதின், பாரதி ஆகிய மூவரும் கடந்த 12ம் தேதி அந்த பகுதியில் மது குடித்தனர். இந்நிலையில், முரளிதரன் ரத்தகாயத்துடன் கிடந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை, போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனர். மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், முரளிதரனை பீர் பாட்டிலால், பாரதி தாக்கியது தெரியவந்தது. அதையடுத்து, கொம்பாக்கத்தை சேர்ந்த பாரதியை, 29, போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை