உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

நெட்டபாக்கம்: வாலிபரை, தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மடுகரை அடுத்த தமிழக பகுதியான ராம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்,21; இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு மடுகரைக்கு பஸ்சில் வந்து இறங்கினார். அப்போது, அதே பஸ்சில் வந்த ராம்பாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன், 20; காலை ஜெயச்சந்திரன் மிதித்துள்ளார். இதனால் பஸ்சில் இருந்து இறங்கிய ஜெயச்சந்திரனை, பாலமுருகன் அவரது சகோதரர் தேவநாதன் மற்றும் இருவர் சேர்ந்து, ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கியுள்ளனர். புகாரின்பேரில், மடுகரை போலீசார் வழக்கு பதிந்து, பாலமுருகனை கைது செய்தனர். தேவநாதன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை