உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காதலியை நண்பருடன் பழக கட்டாயப்படுத்தியவர் கைது

காதலியை நண்பருடன் பழக கட்டாயப்படுத்தியவர் கைது

வானுார்:ஆரோவில்லில், நண்பருடன் காதலியை பழக கட்டாயப்படுத்தி தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண். இவர், ஆறு மாதங்களுக்கு முன், வேளச்சேரி மால் ஒன்றில், நிரூபன், 29, என்பவரை சந்தித்தார். தொடர்ந்து அவரிடம் மொபைல் போனில் பேசி வந்தார். இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வார இறுதி நாளை கொண்டாட கடந்த வாரம், இருவரும் புதுச்சேரி வந்தனர். ஆரோவில் தனியார் கெஸ்ட் ஹவுசில் தங்கினர். அப்போது, அங்கு வந்த அவரது நண்பரிடம், அந்த பெண்ணை நெருக்கமாக பழக, நிரூபன் கட்டாயப்படுத்தினார். இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பெண், நிரூபனை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த நிரூபன், அப்பெண்ணை தாக்கினார். இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, அப்பெண் அளித்த புகாரில், சென்னையில் பதுங்கியிருந்த நிரூபனை ஆரோவில் போலீசார், கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி