ரூ.14 கோடி திமிங்கல எச்சம் வீட்டில் பதுக்கிய நபர் கைது
புதுச்சேரி; புதுச்சேரி அருகே 14 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் எச்சத்தை பதுக்கி, விற்க முயன்ற நபரை போலீசார் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம், பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த மாயகிருஷணன், 47, வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் திமிங்கலம் எச்சத்தை, வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக விழுப்புரம் சரக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rdgpofi5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீசார் வியாபாரி போன்று, மாயகிருஷ்ணனிடம் பேசிய போது, மாயகிருஷ்ணன், 7 கிலோ திமிங்கலம் எச்சம் இருப்பதாகவும், கிலோ 2 கோடி ரூபாய் என விலை பேசினார். போலீசாரின் பேரத்தில், கிலோ 60 லட்சத்திற்கு தர முடிவானது. அதன்படி, தனியாக சென்ற போலீஸ்காரரிடம், வீட்டில் பதுக்கி வைத்திருந்த திமிங்கலம் எச்சத்தை காண்பித்தார். நுண்ணறிவு போலீஸ் குழுவினர் மாயகிருஷ்ணனை கைது செய்து, 14 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர்.