உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

 சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

புதுச்சேரி: சேதராப்பட்டில் இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், 21; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் கிருஷ்ணகிரிக்கு சென்ற சக்திவேல், அந்த சிறுமியை புதுச்சேரி அழைத்து வந்து, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, அவருக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக சக்திவேல் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை