உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான குட்கா விற்றவர் கைது

ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான குட்கா விற்றவர் கைது

நெட்டப்பாக்கம்: மடுகரையில் ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மந்தைவெளி பகுதியில் உள்ள பங்க் கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பதாக போலிசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், குப்புசாமி தலைமையிலான போலீசார் நேற்று மதியம் மடுகரைக்கு சென்று அந்த பங்க் கடையில் ஆய்வு செய்தனர். அப்பொழுது பங்க் கடையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து கடையில் இருந்த ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான 75 கிலோ ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட் போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் மடுகரை தங்கராஜ் நகரை சேர்ந்த துரைராஜ் 33, என்பவரை கைது செய்து, அவர் போதைப்பொருளுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.போலீஸ் நிலையம் அழைத்து வந்த துரைராஜ்யை, போதைப்பொருள் எங்கே இருந்து வருகிறது யார் அனுப்புகிறார்கள் என்று தீவிர விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி