உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டியவருக்கு வலை

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டியவருக்கு வலை

புதுச்சேரி: பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனியார் கல்வி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அந்நிறுவனத்தில் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் கல்வி கற்பித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் 7-ந் தேதி அவரை தொடர்புகொண்டு குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வீடியோக்களை தனியாக அனுப்பி வைக்குமாறு மிரட்டியுள்ளார். அப்போது வீடியோக்களை அனுப்பி வைக்கவில்லை என்றால், அந்த பெண்ணின் புகைபடத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வீடியோக்களை, மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகும் மர்ம நபர் அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.இதுகுறித்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ