கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
புதுச்சேரி:கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது உப்பளம் அம்பேத்கர் சாலை ரெயில்வே தண்டவாளம் அருகே ஒருவர் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும், அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், 26; என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.