கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
புதுச்சேரி: பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். வேல்ராம்பட்டு, ஏரிக்கரை ரோட்டில் பொது மக்களை கத்தியை காட்டி மி ரட்டிய, முருங்கப்பாக்கம் காமராஜ் தெரு வெற்றி வேல், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர் .