உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

 கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஒதியஞ்சாலை போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். மறைமலையடிகள் சாலை, கண்டாக்டர் தோட்டம் சந்திப்பில், வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து கொண்டு, பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரை சேர்ந்த முக்கேஷ் (எ) வாழக்காய், 23, என்பதும், இவர் கத்தி வைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை