உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபான கூடத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

மதுபான கூடத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

வில்லியனுார்:புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த பங்கூர் பகுதியில் மதுபான கூடம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் காலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மது குடிக்க வந்தார்.மாலையில், தான் வைத்திருந்த பணம் தீர்ந்து விட்டதால், கேஷியரிடம் கடனாக ஒரு பீர் பாட்டில் கேட்டார். அவர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் வெளியே சென்று, மீண்டும் மாலை 6:30 மணிக்கு அங்கு வந்து, பெட்ரோல் குண்டை வீசி தப்பினார்.இதில், மதுபான கூடத்தின் கண்ணாடி உடைந்தது. பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கிருந்த ஊழியர்கள், குடி பிரியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவல் அறிந்த வில்லியனுார் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.பெட்ரோல் குண்டு வீசியவர் பங்கூர் பேட் பகுதியை சேர்ந்த அருண்ராஜ், 25, என்பதும், இவர் சமையல்காரராக வேலை செய்வதும் தெரிந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை