மேலும் செய்திகள்
ஏரியில் மூழ்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பலி
14-May-2025
காரைக்கால் : காரைக்காலில் புளிய மரத்திலிருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.காரைக்கால் கோட்டுச்சேரி வரிச்சிக்குடி காந்தி நகரை சேர்ந்த பூவராகவன், 59; இவரது மனைவி சாரதா இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி வரிச்சிக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டு தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியம் பழத்தை பறித்துவிட்டு பூவராகவன் கீழே இறங்கினார்.அப்போது எதிர்பாராத விதமாமக கிளை முறிந்து பூவராகவன் கீழே விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் கிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-May-2025