உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் மயங்கி விழுந்தவர் சாவு

ஆற்றில் மயங்கி விழுந்தவர் சாவு

புதுச்சேரி: ஏனாம், மேடக்கூர் பகுதியை சேர்ந்தவர் மாரட்டி நுாக்குராஜூ,44. இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டதால், காக்கிநாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டது. இந்நிலையில் மாரட்டி நுாக்குராஜூ தனது உறவினரான மல்லாடி சத்தியநாராயணா என்பவருடன், கோதாவரி ஆற்றில் மீன் பிடிக்க படகில் சென்றார். அவர்கள் டைடல் முகத்தவாரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மாரட்டி நுாக்குராஜூ வலையை இழுத்தார். அப்போது அவர் திடீரென ஆற்றில் மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு, ஏனாம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி புகாரின் பெயரில் ஏனாம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ