கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை், காந்தி சிலை பின்புறம் நேற்று மாலை 5:00 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க, நபர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த, பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போலீசார் சீனிவாசன், அண்ணாதுரை ஆகியோர் அவரை, மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் என்பதும், குடும்ப பிரச்னையில் கோபித்துக்கொண்டு புதுச்சேரிக்கு வந்ததும், மனவேதனையில் இருந்தவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. போலீசார் அறிவுரை கூறி பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர்.