உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நர்சை தற்கொலைக்கு துாண்டியவர் விழுப்புரத்தில் மர்ம சாவு

நர்சை தற்கொலைக்கு துாண்டியவர் விழுப்புரத்தில் மர்ம சாவு

அரியாங்குப்பம்; நர்சை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர், விழுப்புரம் லாட்ஜில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.புதுச்சேரி மாநிலம், அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி முருகேஸ்வரி. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் துப்புரவாளராக உள்ளார். இவரது மகள் சந்திரமதி, 26; டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வீரப்பன் மகன் தமிழ்வாணன்,26; என்பவரும் காதலித்துள்ளார்.தமிழ்வாணனுக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது. இதனால், இவர்கள் காதலை முருகேஸ்வரி கண்டித்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் சந்திரமதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முருகேஸ்வரி, தமிழ்வாணன் துாண்டுதலால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, தமிழ்வாணனை தேடி வந்தனர்.இந்நிலையில் விழுப்புரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள லாட்ஜில் தமிழ்வாணன் நேற்று காலை துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து அவரது தாய் முத்தம்மா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.நர்சை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர், லாட்ஜில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !