பள்ளி மாணவர்களுக்கு மேலாண்மை பயிற்சி
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் சார்பில், மாணவர்களுக்கான உயர் கல்வி, ஒழுக்க மேலாண்மை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள புனித லுாயிஸ் தெ கோன்சாகா அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், தலைமை ஆசிரியர் சுதாதலைமை தாங்கினார். இளவேங்கை முன்னிலை வகித்தார். எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி மாணவர்களுக்கு ஒழுக்க மேலாண்மை, உயர் கல்வி, உயர் எண்ணங்கள் மற்றும் மனித வளப் பயிற்சி அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்சம்பத், போதைப் பொருள் மற்றும் மதுவால் தனி மனித வாழ்விலும், குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்படும் தீமைகள், பொருளாதார பிரச்னைகள்மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மாணவர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.