உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு சர்வேயர்கள் அளவீட்டால் பரபரப்பு

மணக்குள விநாயகர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு சர்வேயர்கள் அளவீட்டால் பரபரப்பு

வில்லியனுார்: வில்லியனுாரில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் நிலம் அளவீடு பணி நடந்தது.வில்லியனுார் பைபாஸ் சாலை அருகே உள்ள மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ரூ. 10 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. நிலத்தை சுற்றி இருந்த மற்ற தனியார் நிலங்களை மனைகளை பிரித்து விற்பனை செய்துவிட்டனர். அதில், பலர் வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில் மனை பிரிவுகளுக்கு இடையே உள்ள மணக்குள வினாயகர் கோவில் நிலத்தில் தற்காலிக சாலை அமைத்தனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம், அனுமதி இல்லாமல் அத்துமீறி கோவில் நிலத்தில் சாலை அமைத்துள்ளதை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கோவில் நிலத்தை சுற்றி உள்ள மனை வாங்கியவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனரா என புதுச்சேரி சர்வே துறை சார்பில், சர்வேயர் சரவணன் தலைமையில் ஊழியர்கள் கோவில் நிலத்தை நேற்று அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் தற்காலிக சாலையை தவிர கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என, தெரியவந்துள்ளது. நிலம் அளவிடு செய்தபோது, மணக்குள விநாயகர் கோவில் சிறப்பு அதிகாரி பழனியப்பன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை