மேலும் செய்திகள்
மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவம்
19-Aug-2025
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் வீதியுலா நேற்று நடந்தது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 65ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 28 ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, கடந்த 2ம் தேதி சித்தி, புத்தி விநாயகர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, நேற்று 6ம் தேதி காலை 7:00 மணிக்கு தேர் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாளை (8ம் தேதி) இரவு 8:00 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம், 14ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் பிரம்மோற்சவம் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
19-Aug-2025