மேலும் செய்திகள்
பாரம்பரிய நெல் வகை உற்பத்தி பயிற்சி முகாம்
16-Dec-2025
புதுச்சேரி: ஒதியம்பட்டு கிராமத்தில் மணிலா சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து, தேசிய எண்ணெய்வித்து இயக்க திட்டத்தின் கீழ் நடந்த முகாமில், வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். வில்லியனூர் கோட்ட இணை வேளாண் இயக்குநர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அறிவியல் நிலைய தலைவர் மற்றும் திட்ட இயக்குனர் ரவி 'நிலக்கடலை சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள்' குறித்து பேசினார். அறிவியல் நிலைய முன்னாள் தலைவர் விஜயகுமார் 'பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு' குறித்து பேசினார். பண்ணை மேலாளர் அமலோற்பவன் 'இயற்கை தொழில் நுட்பங்கள்' குறித்து பேசினார். இம்முகாமில், ஒதியம்பட்டு, வில்லியனூர், திருக்காஞ்சி உழவர் உதவியகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, உழவர் உதவியாக களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.
16-Dec-2025