உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மன்மோகன்சிங் மறைவு: காங்கிரசார் மலரஞ்சலி

மன்மோகன்சிங் மறைவு: காங்கிரசார் மலரஞ்சலி

புதுச்சேரி; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவினையொட்டி புதுச்சேரி காங்., தலைமை அலுவலகத்தில், அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மூத்த காங்., தலைவர் மணி, பொதுச்செயலாளர் தனுசு, வக்கீல் மருது பாண்டியன், செயற் குழு உறுப்பினர் உதயகுமார், உருளையன்பேட்டை வட்டார காங்., தலைவர் ஆறுமுகம், செயலாளர்கள் சத்தியசீலன், ராஜாராம் மற்றும் காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !