உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தாய் வழி சான்றிதழ் வழங்க மா.கம்யூ., கோரிக்கை

 தாய் வழி சான்றிதழ் வழங்க மா.கம்யூ., கோரிக்கை

புதுச்சேரி: தாய் வழி சான்றிதழ் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மா.கம்யூ., செயலாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தாய் வழி பூர்வீகத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கில்,அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதைதொடர்ந்து, தாய் வழி சான்றிதழ் வழங்குவதையும் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் கல்வி பயில விண்ணப்பிக்க முடியாமல் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசின் இத்தகைய போக்கினை மா.கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது. மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக பூர்வீக தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கிட புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை