உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி

பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி

புதுச்சேரி: உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, திருமண நிதி உதவிக்கான ஆணையினை, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வழங்கினார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, புதுச்சேரி சட்டசபையில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பங்கேற்று, ஆறு பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி அ.தி.மு.க., துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !