உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

புதுச்சேரி : சமூக நலத்துறை சார்பில் தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அங்கன்வாடி மையத்தில் நடந்தது. கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி சித்ரா மாணவிகள் தற்காப்பு கலை பயிற்சி மேற்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் லயனா, துணை ஆய்வாளர்கள் சிவக்குமார், காயத்ரி, கிராம சுகாதார செவிலியர்கள் ராஜலட்சுமி, சுதா, ஆஷா பணியாளர்கள் மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், போலீஸ் துறையில் வீரமங்கை விருது பெற்ற மகளிர் போலீஸ் ஹேமமாலினி, மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்தார். இதில், சுப்பையா நகர் நலவாழ்வு சங்கத் தலைவர் பத்பநாபன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ