இறைச்சி கடை ஊழியர் பலி
புதுச்சேரி: புதுச்சேரி, மூலக்குளம் டைமண்ட் நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு, 40; கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உடைய இவர் கடந்த 15ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டின் வாசலில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மருத்துவமனையில் இருந்து டாக்டர்களுக்கு தெரியாமல் வெளியேறிய ராஜகுரு, 16ம் தேதி மதியம் தலையில் காயங்களுடன் லப்போர்த் வீதியில் நின்றிருந்த தட்டு வண்டியின் மீது படுத்திருந்தார். இதைகண்ட பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுரு இறந்தார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.