உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

திருக்கனுார்: வம்புப்பட்டில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியபோது, மின்சாரம் தாக்கி மெக்கானிக் கீழே விழுந்து இறந்தார்.திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு, முருகாவரத்தை சேர்ந்தவர் பாவாடை, 50; மோட்டார் பழுது பார்க்கும் மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் மதியம் 12:00 மணி அளவில் சோரப்பட்டு ஏரிக்கரை ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பீஸ் போடும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பாவாடை துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதித்து பாவாடை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !