உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்

 சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்

புதுச்சேரி: போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் குடியரசு தின விழாவில் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஜீவன் ரக் ஷா பதக்கம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜீவன் ரக் ஷா பதக்கம் காவலர் அன்பரசனுக்கு வழங்கப்ப ட்டது. அவர், டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் குளித்த மூவரை காப்பாற்றியதற்காக வழங்கப்பட்டது. கவர்னரின் காவல் பதக்கம் உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடந்த பொதுகூட்டத்திற்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த நபரை கண்டறிந்து தடுத்தற்காக சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கும், காவல் துறை தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சிறப்பு நிலை சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலகிருஷ்ணன், இந்திய காவல் ஜூடோ போட்டிகளில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற சிறப்பு நிலை ஏ.எஸ்.ஐ., விமலா ஆகியோருக்கு கவர்னரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. கவர்னரின் பாராட்டு சான்றிதழ் சிறந்த காவல் பணிக்கான கவர்னரின் பாராட்டு சான்றிதழ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் ராவ், ராஜூ, ஏ.எஸ்.ஐ.,க்கள் வெங்கடராமன், கார்த்திகேயன், சிறப்பு நிலை ஏட்டு தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதீ உத்கிருஷ்ட் சேவா பதக்கம் போலீஸ் துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்காக போலீஸ் தலைமையக சீனியர் எஸ்.பி., அணில் குமார் லால், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப் -இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், ஷைமா, சிந்து, ஜெகதீசன், பாலாஜி ஆகியோருக்கு அதீ உத்கிருஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. உத்கிருஷ்ட் சேவா பதக்கம் போலீஸ் துறையில் 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்காக டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், ஏ.எஸ்.ஐ.,க்கள் சந்திரமொழி, குணசேகரன், ஜெயகுமரன், சிரஞ்சீவி, ஹேமநாத செல்வம், விஜயகுமார் ஆகியோருக்கு உத்கி ருஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த போலீஸ் ஸ்டேஷன் உள்துறை அமைச்சகத்தின் மிகச்சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான விருது பாகூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை