உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் 24ம் தேதி கடலுார், புதுச்சேரி வருகை

மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் 24ம் தேதி கடலுார், புதுச்சேரி வருகை

புதுச்சேரி: மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவ நிபுணர் வரும் 24ம் தேதி கடலுார் மற்றும் புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.சென்னை மியாட் மருத்துவமனை சிறுநீரகவியல் நிபுணர் சஞ்சு உன்னிகிருஷ்ணன், நாளை மறுநாள் (24 ம் தேதி) கடலுார் ஆற்காட் மருத்துவமனையில் காலை 10:00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.தொடர்ந்து மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 வரை புதுச்சேரி, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில் ஆலோசனை வழங்குகிறார்.இதில், சிறுநீரக கல், சிறுநீரக செயலிழிப்பு, புரோஸ்டெட், சிறுநீரகம், அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோய், சிறுநீர் அடக்க முடியாத நிலை, பிறவி சிறுநீரக நோய்கள்.சிறுநீரில் ரத்தம், கோலா நிற சிறுநீர், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், முதுகுப்புறம், சிறுநீர் ஓட்டம் குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரம், விதைப்பையில் வலி, வீக்கம், ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.முகாமில் பங்கேற்க வருபவர்கள், முந்தைய மருத்துவ பதிவுகள் இருந்தால் கொண்டு வர வேண்டும். முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம் ரூ.500. முன்பதிவுக்கு 75400 44741 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ