உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மியாட் சிறப்பு நிபுணர் மருத்துவ ஆலோசனை

மியாட் சிறப்பு நிபுணர் மருத்துவ ஆலோசனை

புதுச்சேரி,: மியாட் மருத்துவமனையின் இருதயவியல் சிறப்பு நிபுணர் மணிகண்டன், புதுச்சேரி தி பாஷ் மருத்துவமனையில் நேற்று மருத்துவ ஆலோசனை வழங்கினார்.சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து இருதயவியல் சிறப்பு மருத்துவ நிபுணர் மணிகண்டன், புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில் நேற்று மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்கினார்.அதில், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட இருதய அறுவை சிகிச்சை, திறந்த நிலை இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், சீரற்ற இதயத் துடிப்புக்கான ஆர்.எப். ஊறுநீக்கம், பெரியவர்களுக்கான டிவைஸ் குளோஷர், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி - ஸ்டென்டிங், மார்பு வலி, அசவுகரியம், வியர்த்தல், சோர்வு, மூச்சுத் திணறல், படபடப்பு, பாதங்கள், இடுப்பு அல்லது அடிவயிற்றில் அசாதாரண வீக்கம், ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, தட்டையாக படுத்துக் கொள்வதில் சிரமம், இருதய நோய் கொண்ட குடும்ப வரலாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கினார்.முன்னதாக, கடலுார் ஆற்காட் மருத்துவமனையில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !